/* */

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு: ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியம் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்குதல். ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ்.

தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியம் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்குதல். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதலும் பணி நிலைகளும்) வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு, நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சமூகபாதுகாப்பும் நல உதவிகளும் வழங்குவதற்கு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தினை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் சென்னையை தலைமையிடமாக கொண்டு வாரிய செயலாளர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் யாதொரு நாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த ஆனால் 60 வயது நிறைவடையாத கலைஞர்கள் ரூ.100 பதிவுக்கட்டணமாக செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 31ம் தேதிக்குள் ரூ.100- கட்டணம் செலுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கத் தகுதியுடைய கலைகள் பற்றிய விவரங்கள் அரசு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு நல உதவிகள் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக நாளிதழ்களில் செய்திகளாக வெளியிடப்பட்டு இது நாள் வரையில் மாவட்ட அளவில் 2638 நாட்டுப்புறக் கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவுசெய்து உள்ளனர்.

வம்சாவழியாக தொடர்ந்து மண்ணின் கலைகளை பரப்பிவரும் பிறவிக்கலைஞர்களான கிராமிய / நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது வறுமையின் காரணமாக பாரம்பரியமிக்க தங்களது கலைகளை வருங்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுத்து தமிழ் பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கவும், கிராமிய /நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் ஏதுவாக, பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் வழங்கிட அரசுஆணையிட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ள கலைஞர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வ.எண். விவரம் நலதிட்டஉதவிதொகை

1. குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை ஆண்டு ஒன்றுக்கு (இரு வாரிசுகளுக்கு) ரூ.1000/- முதல் ரூ. 8000 /- வரை

2. திருமண நிதியுதவி (உறுப்பினர் /மகள் /மகன்) (இரு முறை மட்டும்) ரூ.5000/-

3. மகபேறு நிதியுதவி (பெண் உறுப்பினர்களுக்கு இரு முறை மட்டும்) ரூ.6000/-

4. மூக்கு கண்ணாடி வாங்குவதற்கானஉதவி (மூன்று வருடத்திற்கு ஒருமுறை) ரூ.1500/-

5. இயற்கை மரணம் /ஈமச்சடங்குக்கானஉதவித் தொகை ரூ.25000/-

6. விபத்துமரண உதவித்தொகை ரூ.1,00,000/-

தென்காசி மாவட்டத்தில் இன்றளவும், நாட்டுப்புறக் கலைஞர்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்ற கலைகளில் நாட்டுப்புற இசைக்கருவிகளான மேளம், நாதஸ்வரம், தவில், ஆதிமேளம் (பறை), தாரை, தப்பட்டை, உறுமிமேளம், நையாண்டி மேளம் மற்றும் பேண்டு வாத்தியம் இசைத்தல் தவிர்த்து பிறநாட்டுப்புறக் கலைகளான வில்லிசை, உறுமி கோமாளியாட்டம், ஒயில்கும்மி, ஒயிலாட்டம், கரகாட்டம், களரி, காளைஆட்டம், கும்மியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கோலாட்டம், சக்கையாட்டம், சாமியாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பக்கிரிஷா பாட்டு, பஜனை பாட்டு, புலியாட்டம், பெரியமேளம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், மாரடிப்பாட்டு, இராஜா ராணி ஆட்டம், ஸ்பெசல் நாடகம், ஜிம்ப்ளா மேளம் (எருது கட்டு மேளம்) முதலிய கிராமிய கலைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகின்றன.

தற்போது செப்டம்பர்; 1 முதல் தமிழக அரசால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்;கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது குழந்தைகள் பயின்றுவரும் கல்வி நிறுவனங்களிடமிருந்து படிப்புச் சான்றிதழ்கள் மட்டுமே பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்.

தென்காசி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 4000 கலைஞர்களுக்கு மேல் இருந்தும், நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யாத கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்திடவும் பதிவு பெற்ற கலைஞர்கள் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும்

உதவி இயக்குநர்

மண்டலக் கலைபண்பாட்டுமையம்

870/21,அரசுஅலுவலர் "ஆ" குடியிருப்பு

திருநெல்வேலி - 07.

தொலைபேசி எண்.0462-2901890.

என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!