/* */

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

HIGHLIGHTS

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி எனவும் கொள்ளைக் கூட்டணி இல்லை எனவும், அதிமுக தற்போது முதல் இடத்தில் உள்ள நிலையில் இரண்டாவது இடத்திற்கே போட்டி நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தென்காசியில் தனியார் விடுதியில் இரவு நேரம் அவரை நேரில் சந்தித்து அதிமுக, எஸ் டி பி ஐ, தேமுதிக உள்ளிட்ட கூட்டனி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பாலாஜி கூறுகையில்,

அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சிகள் ஆதரவினால் மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறினார். முதலிடத்தில் அதிமுக உள்ள நிலையில் தற்போது இரண்டாவது இடத்திற்குத் தான் போட்டி நடைபெற்று வருவதாக கூறினார். அதிமுக தலைமையான கூட்டணி தான் அருமையான கூட்டணி, உண்மையான கூட்டணி, கொள்கைகூட்டணி எனவும் கொள்ளைக் கூட்டணி இல்லை எனவும் தெரிவித்தார்.

Updated On: 26 March 2024 12:52 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...