/* */

கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அனுமதி: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அனுமதி: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 

சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயல் அருகே உள்ளது மாலைகண்டான் கிராமம். இந்த கிராமம் வானம் பார்த்த பூமி. இக்கிராமத்தினர் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீரை வரத்து கால்வாய் மூலம் கண்மாயில் சேமித்து விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இக்கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு செம்மண் குவாரி அமைக்க கடந்த 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.. இதனை எதிர்த்து கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மண் குவாரி அமைப்பது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று அரசு அனுமதி வழங்கியதாக கூறி ஒரு தரப்பினர் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணலை அள்ளி சென்றதை அறிந்த கிராமத்தினர் இன்று மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் முன்பு முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 14 Feb 2022 1:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!