/* */

கருப்புபேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கருப்புபேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சேலம் அரசு மருத்துவமனையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவி சுதா தலைமையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் அரசு செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 29 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்