/* */

விரைவில் சுற்றுலா தலமாக மாறும் ராணிபேட்டை பிஞ்சி ஏரி

ராணிப்பேட்டை நகர மையத்தில் உள்ள பிஞ்சி ஏரி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது என்று அமைச்சர் காந்தி கூறினார்

HIGHLIGHTS

விரைவில் சுற்றுலா தலமாக மாறும்  ராணிபேட்டை பிஞ்சி ஏரி
X

பிஞ்சி ஏரியை சுற்றுலா தலமாக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ராணிப்பேட்டை முத்துக்கடையில் 15 ஏக்கர் பரப்பளவில் பிஞ்சி ஏரி இருக்கிறது. இந்த ஏரியின் கீழ் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இருந்தது. தற்போது அவை அனைத்தும் வீட்டு மனைகளாகி விட்டன.

ஏரியும் புதர்மண்டி, கழிவுநீர் தேக்கமாக காட்சியளிக்கிறது. ஏரியில் குப்பை கொட்டி எரிக்கின்றனர். ஏரியை சுற்றி ஆக்கி ரமிப்புகளும் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியை சீர மைத்து பூங்கா அமைக்க வேண்டும்.நல்லநீர் தேக்கி படகு குழாம் அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் எம்பியுமான ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூரெடுக்க வேண்டும். ஏரிக் கரையை பலப்படுத்தி நடை பாதை அமைக்க வேண்டும். மரக்கன்றுகள் நட வேண்டும். ஏரிக்கு மத்தியில் தீவு அமைப்பது, ஏரியில் நீர் தேக்கி படகு குழாம் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு படகு சவாரி இயக்குவது போன்ற பல திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடந்தது.

இதில் மாநில திமுக சுற்றுச்சூழல் அணிதுணைச் செயலாளர் வினோத்காந்தி, ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகராட்சி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முத்துக்கடை பகுதி ஒரு முன்மாதிரியான சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய பொழுதுபோக்கு, சுற்றுலாதலமாக அமையும்

Updated On: 6 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்