/* */

வாலாஜா அருகே மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

வாலாஜா அடுத்த மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

வாலாஜா அருகே மலைமேடு கிராமத்தில்  பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
X

பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கிய அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி மலைமேடு கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகுதிநேர நியாய விலை கடை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினர்.

துணை பதிவாளர் சந்திரன், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சபரி கிரிசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், ஜான் ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி மோகன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மணிமேகலை நன்றி கூறினார்.

Updated On: 23 March 2022 12:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  8. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  9. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை