/* */

கல்லூரி மாணவிகளுக்கு டூவீலர் ஓட்ட லைசன்ஸ்: டிஎஸ்பி வழங்கினார்

இராணிப்பேட்டையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு டூவீலர் ஓட்ட லைசன்ஸை டிஎஸ்பி பிரபு வழங்கினார்.

HIGHLIGHTS

கல்லூரி மாணவிகளுக்கு டூவீலர்  ஓட்ட லைசன்ஸ்: டிஎஸ்பி வழங்கினார்
X

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனம் சார்பில் கல்லூரிபடித்து வரும் மாணவிகளுக்கு டூவீலர் ஓட்டும் லைசன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, இராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முகேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, இராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு கலந்து கொண்டு லைசன்ஸை வாலாஜாப்பேட அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார். பின்புநிகழ்ச்சியில் பேசிய டிஎஸ்பி பிரபு, மாணவிகள் விபத்துகள் ஏற்படாதவாறு கவனமாக ஓட்டவேண்டும். வாகனங்கள் ஓட்டும்போது விதிமுறைகளைக் கட்டாயம் மதிக்கவேண்டும் . கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து தான் வாகனங்களை ஓட்டவேண்டும். மற்றவர்களையும் போட்டுகொண்டு ஓட்டும்படி கூறவேண்டும் என்றார்,

மேலும், மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், கூடவே வேலைவாய்ப்புக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தேவையான முயற்சிகளை எடுக்கவேண்டும், நுழைவுத்தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள், தொண்டு நிறுவனத்தைச்சேர்ந்தவர்கள்,கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Sep 2021 4:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு