/* */

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்: கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்:  கலெக்டர் உத்தரவு
X

கடைகளில் தடை செய்யப்பட்ட பிஸாட்டிக் பொருட்களை பறிமுதல் செய்த போது எடுத்த படம்கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திட, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட் காந்தி ரோட்டில் உள்ள வணிக விற்பனை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து பொதுமக்களுக்கும் மற்ற சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வருவதை அனைத்து பொருட்களையும் கைப்பற்றினார்.

அதில் சுமார் 1.5டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடைக்காரருக்கு அபராதம் விதிகாமல், துணி மஞ்சப்பை 2000 எண்ணிக்கையில் வாங்கி நகராட்சி அலுவலகத்தில் வழங்குமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.

இதனை வாங்கி தருவதாக உறுதி அளித்த கடைக்காரர், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய போவது இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இங்குள்ள கடைகளில் கண்காணிக்கவும் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து விற்பனை செய்யும் கடையினை சீல் வைக்கவும் நகராட்சி ஆணையாளர் ஏகராஜிடம் கலெக்டர் கூறினார்

Updated On: 5 May 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!