/* */

பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி

Erode news- பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் உள்பட 97 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
X

Erode news- 100 சதவீத தேர்ச்சி (மாதிரி படம்)

Erode news, Erode news today- பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் உள்பட 97 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 104 அரசுப் பள்ளிகள், 2 நலத்துறை பள்ளிகள், 6 முனிசிபல் பள்ளிகள், 12 அரசு உதவி பெறும் பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், 81 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 222 பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் 20,678 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 22 அரசு பள்ளிகள், 1 முனிசிபல் பள்ளி, 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 7 தனியார் பள்ளிகள், 62 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 97 பள்ளிகளில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்:-

1. பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ,

2. டி.என்.பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

3. நம்பியூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி,

4.கூடக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி,

5.அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி,

6. ஈரோடு காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி,

7.பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி,

8.அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளி,

9.சாலைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி,

10.மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி,

11.தளவாய்ப்பேட்டை அரசு வினோபா மேல்நிலைப் பள்ளி,

12.ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி,

13.மாத்தூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி,

14.பெரியபுலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி,

15.ஓடத்துறை எஸ்.எம். அரசு மேல்நிலைப் பள்ளி,

16.காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி,

17.பசுவப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி,

18.விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி,

19.சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி,

20.துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளி,

21.காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி,

22.பசுவனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி என 22 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Updated On: 6 May 2024 7:00 AM GMT

Related News