/* */

தொழில் முனைவோர்- நிறுவனமேம்பாட்டிற்கு ரூ.75 லட்சம் கடன் மானியம் அறிவிப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில்முனைவோர், நிறுவனமேம்பாட்டிற்கு தொழிற்கடன்மானியம் ₹75லட்சம் என கலெக்டர் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

தொழில் முனைவோர்- நிறுவனமேம்பாட்டிற்கு ரூ.75 லட்சம் கடன் மானியம் அறிவிப்பு.
X

மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

.ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழில.முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டிற்கு தொழிற்கடன் மானியம் ₹75லட்சம் வழங்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும் முதல்தலைமைறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க"புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாடுதிட்டத்தை (NEEDS) தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.. அதில்,புதியதொழில் முனைவோர். மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 12ஆம் வகுப்பிற்கு தளர்த்தியும் தனிநபர் முதலீட்டு மானியம். ரூ50லட்சத்திலிருந்து ரூ.75லட்சமாக உயர்த்தியும், உள்ளது. மேலும் பட்டியலினம் மற்றும. பழங்குடியினருக்கு 10%கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன்பெறும் வயதாக பொதுப் பிரிவினருக்கு 21 முதல்35வயதும், சிறப்பு பிரிவான மகளிர்,ஆதிதிராவிடர், பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோர், ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 45வயது அதிகபடசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வருமானவரம்பு எதுவுமின்றி 3ஆண்டுகளுக்கு குறையமால் தமிழகத்தில் வசித்து வருபவராக இருக்கவேண்டும்..

திட்டத்தின் கீழ்,அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்தொடங்க குறைந்தளவு திட்டமதிப்பீடு ரூ 10லட்சத்திலிருந்து அதிகப்பட்சமாக ரூ5கோடிவரைக்கும் கடனாகப் பெற்று அதில் 25% ரூ.75லட்சம் வரைமற்றும் SC,STக்கு 10% கூடுதல்மானியம் பெற்று பயனடையலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது..

எனவே, அரிசிஆலை, மரச்சாமான்கள் தயாரித்தல்,மாவுமில், சிஎன்சி(CNC)லேத் இயந்திரம், அட்டைப்பெட்டி தயாரித்தல், பேப்பர்போட்,ஜேசிபி,போர்வெல் வாகனம்,, கிரேன், பேன்டேஜ்கிளாத், நடமாடும் உணவகம். கடலைமிட்டாய் தயாரித்தல்,கால்நடைதீவனம் தயாரித்தல் , பவர்லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிசியோதரபிகிளினிக், ஆலோபிளாக்மற்றும் ப்ளைஆஷ்ப்ரிக், ஜிம் சென்டர், (ஆண்,பெண்) ஆயத்தாடைகள் தயாரிப்பு, ஸ்டீல்பீரோ,கட்டில் தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்தவற்றிற்கு தொழிற்கடன் வழங்கப்படுகிறது.

தொழில் தொடங்க பொதுப்பிரிவினர் 10%முதலீடாகவும் சிறப்பு பிரிவினர் 5%முதலீடு மட்டும் போதுமானாதாகும் மேலும் கடன் பெற்று தவனைகளை தவறாமல் முறையாக செலுத்திவரும் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக பின் முனை வட்டி மானியமாக 3% வழங்கப்படும்.இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றுக் காரணமாக மார்ச்2022வரை தொழில் முனைவோர்க்கு அளிக்கும் பயிற்சியையும் அரசு விலக்கு அளித்துள்ளது.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் www.msmeonline..tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது..

மேலும் விவரங்களுக்கு, எண்5, தேவராஜ் நகர்,இராணிப்பேட்டை என்ற முகவரியில் இயங்கிவரும் பொதுமேலாளர், மாவட்ட தொழில்மையம், அலுவலகத்தை நேரிலோ(அ)04172- 270111 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பபனடையலாம் என்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்..

Updated On: 5 Nov 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்