/* */

N-95க்கு இணையான ஆயுர்வேத முகக்கவசம் தயாரித்த வாலாஜா மாணவர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் N-95 க்கு இணையான ஆயுர்வேதிக் முக கவசங்களை தயாரிக்கும் பிடெக் படித்து வரும் கல்லூரி மாணவர்

HIGHLIGHTS

N-95க்கு இணையான ஆயுர்வேத முகக்கவசம் தயாரித்த வாலாஜா மாணவர்
X

N-95 க்கு இணையான ஆயுர்வேதிக் மாஸ்க் தயாரித்து பிடெக் மாணவர் அசத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நாகய்யா செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜாமகன் சஜீத்(19) இவர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டிலுள்ள ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் BTec கெமிக்கல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

தற்போது கொரொனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரி அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் இருந்த சஜீத் எப்போதும் தொடர்ந்து முகக் கவசம் அணிவதால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுவதை உணர்ந்தார்.

அதனால் சுவாச மண்டலத்தில் சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஆயுர்வேத முறையில் புதியதாக முக கவசத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி,அதற்காக பல சித்த மருத்துவ புத்தகங்களைப் படித்து மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொண்டு இறுதியில் 16 வகையான மூலிகைகளைக் கொண்டு சுவாசக் கோளாறுகளை நீக்க கூடிய ஆயுர்வேத முக கவசத்தை தயாரித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார்.

முகக்கவசத்தில் அதிமதுரம்,சிந்தில் கொடி, விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி, கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்ளிட்ட 16 வகையான மூலிகைகளை கொண்டு தயாரித்துள்ளார்.

பின்னர் சென்னையில் அரசு அங்கீகரித்துள்ள ஆயுர்வேத மூலிகைகளை நாட்டு மருந்து கடைகளுக்கு வழங்கும் மொத்த விற்பனையாளர்களிடம் தேவையான மூலிகைகளை வாங்கி அதை வைத்து குறைந்த அளவிலான முகக்கவசங்களை தயாரித்து பயன்படுத்துவதற்கு முன்பு SOUTH INDIAN TEXTILES RESEARCH மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தார்.

அந்த சோதனையில் ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தின் சோதனை முடிவுகள்படி, முகக்கவசம் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் வரையறையின் கீழ் 20 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டருக்கு குறைவாக உள்ள நிலையில் முகக் கவசங்கள் பொதுமக்கள் அணிய ஏற்றது என சான்றளிக்கப்பட்டது. இது N-95க்கு இணையானது என தெரிவித்த அந்த மாணவன் மேலும் இது 88.82 சதவீத ஆன்டிவைரல் ஆக்டிவிட்டி என சான்று பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு நிறுவனத்தில் இருந்தும் முறையான சான்றுகளைப்பெற்றுக் கொண்ட இளைஞர், ஆயுர்வேத முறையில் முக கவசங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார்.


மேலும் அவர் தனது தந்தையின் உதவியோடு வீட்டில் கடந்த இரு மாதங்களாக ஆயுர்வேத முகக்கவசங்களை அதிக அளவில் தயாரித்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் என கொரோனா காலத்தில் கள பணியாற்றுவோருக்கு இலவசமாக முகக்கவசங்களை தினந்தோறும் வழங்கி வருகிறார். துணியாலான இந்த முகக்கவசத்தை மூலிகைகள் அடங்கிய சிறு குப்பி மூக்கிற்கு அருகில் வைக்கப்படுகிறது. இந்த குப்பிகள் நிரப்பப்பட்டுள்ள 16 மூலிகைகள் அடங்கிய கலவையை சுவாசிக்கும் போது இருமல்,சளி, கபம், தொண்டை வலி, உள்ளிட்ட சுவாசக்கோளாறுகள் ஆகியவை நீங்குவதோடு, புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும் சுவாசிக்க எளிமையாக உள்ளதாகவும் கூறினார்.

இதன் காரணமாக பொதுமக்கள் சுவாசக்கோளாறு இன்றி இந்த முக கவசத்தை தொடர்ந்து அணியலாம் என அதை தயாரித்த இளைஞர் தெரிவிக்கிறார். மேலும் முகக் கவசத்தை துவைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் எனவும் அதில் உள்ள 16 வகை மூலிகை பொருட்களை வீணாக்காமல் நீராவி பிடிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம் என கல்லூரி மாணவர் சஜீத் தெரிவித்துள்ளார்

Updated On: 3 Jun 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!