/* */

தலைமைக் காவலர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில், மணல் கடத்தலை தடுக்க சென்ற தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் சுரேஷ் என்பவனுக்கு ராணிப்பேட்டை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

HIGHLIGHTS

தலைமைக் காவலர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளாற்றில் கடந்த 20- 7-2014 ஆம் ஆண்டு மணல் கொள்ளையை தடுக்க சென்ற தலைமை காவலர் கனகராஜ்(41) என்பவரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் சுரேஷ் (32) என்றவன் கைது செய்யப்பட்டான்.

இந்த கொலை சம்பந்தமான வழக்கு ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கொலைக் குற்றவாளியான சுரேஷ் என்பவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7,000 ரூபாய் ரொக்கப் பணம் செலுத்த தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து சுரேஷ் மருத்துவ பரிசோதனையை முடித்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தலைமை காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில், கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 18 Feb 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்