/* */

அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற கனிமொழி

அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற கனிமொழி
X

அறிவியல் மேதை அப்துல்கலாம் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி என கனிமொழி எம்பி ராமேஸ்வரத்தில் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி இன்று ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பிரச்சாரபயணம் மேற்கொண்டார். காலையில் தனுஷ்கோடி சென்று அங்குள்ள மீனவர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, அதன் பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏபிஜே.அப்துல்கலாம் வீட்டிற்கு வருகை தந்தார். அவரை கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன் தலைமையில் கலாம் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

கலாமின் அண்ணன் முகமது முத்துமீரா மரைக்காயரிடம் ஆசி பெற்ற கனிமொழிக்கு கலாமின் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர், தான் எழுதிய அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை என்ற புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார். கலாமின் அண்ணன் வழி பேரன் ஷேக்சலீம் கலாமின் நினைவுகளை கனிமொழியோடு பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, இந்தியாவின் மாபெரும் அறிவியல் மேதை அப்துல்கலாம் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி என கனிமொழி எம்பி கூறினார். கனிமொழியுடன் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா , முன்னாள் எம்பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் நகரசெயலாளர் ஜான்பாய், ராமநாதபுரம் எம்பி நவாஷ்கனி உட்பட ஏராளமானோர் கலாம் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

Updated On: 23 Jan 2021 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...