/* */

மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்க கலைஇலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமென கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது

HIGHLIGHTS

மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்க கலைஇலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்
X

புதுக்கோட்டையில் நடந்த தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட பேரவைக்கூட்டம்

மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமென கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர் களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தி யுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பெருமன் றத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டில் மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர் களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களைத் தொடங்க வேண்டும். நூலகங்களைப் பராமரிக்க போதுமான அளவுக்கு பணியாளர் களையும் நியமிக்க வேண்டும்.

அரசு விழாக்களில் துண்டு, சால்வைக்குப் பதிலாக புத்தகங்க ளை நினைவுப் பரிசாக வழங்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கி சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொறியியல், மருத்துவப் படிப்புக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

பேரவைக் கூட்டத்துக்கு, பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் மு. சிவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் ஞா. சிங்கமுத்து வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் கோவில் குணா, மாவட்ட சிறப்புத் தலைவர் அஜாய்கோஷ், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறைந்த முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும் எழுத்தாளருமான சந்திரகாந்தனின் படத்தை, மூத்த உறுப்பினர் செம்பை மணவாளன் திறந்து வைத்தார். பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் என்.ஆர். ஜீவானந்தம் அறிக்கை வாசித்தார். உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு :மாவட்டத் தலைவராக பாலசுப்பிரமணிய பாரதி, செயலராக என்.ஆர். ஜீவானந்தம், பொருளாளராக எழுத்தாளர் சோலச்சி, துணைத் தலைவராக இளங்கோவடிவேல். துணைச் செயலர்களாக எழுத்தாளர் அண்டனூர் சுரா, ஞா. சிங்கமுத்து, மாவட்ட சிறப்புத் தலைவராக அஜாய்குமார்கோஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் 27 பேரைக் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு. மாதவன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் சோலச்சி நன்றி கூறினார்.

Updated On: 17 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  2. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  7. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  8. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்