/* */

சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமின்றி மொபைல் போனில் மூழ்கியுள்ளனர்: எஸ்பி பேச்சு

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையும் பொதுமக்களும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமின்றி மொபைல் போனில் மூழ்கியுள்ளனர்: எஸ்பி  பேச்சு
X

புதுக்கோட்டையில் இன்று காவல்துறை மற்றும் பொதுமக்களுடன் நான் நல்லூர் என்னும் இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

சிறுவர்கள் விளையாட்டில் தற்போது ஆர்வம் இல்லாமல் மொபைல் போனில் மூழ்கிப் போயுள்ளனர் என்றார் புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்களிடம் நல்லுறவைப் பேணும் விதத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையும் பொதுமக்களும் இணைந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானம், மாவட்ட விளையாட்டு மைதானம், உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் கிரிக்கெட், இறகுப்பந்து , கைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் காலையிலிருந்து மாலை வரை நடைபெற்றது.இந்த போட்டியில் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையம், திருக்கோகர்ணம், நகர காவல் நிலையம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பொதுமக்களும் இணைந்து பங்கேற்றனர்,

புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன், டிஎஸ்பி லில்லி கிரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேசுகையில், காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவைப் பேணும் விதத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தற்போது காலகட்டத்தில் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளில் மூழ்கிப் போயுள்ளனர்.சிறுவர்கள் வெளிப்புற விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடாமல் இருக்கின்றனர். எனவே காவல் துறை சார்ந்த குழந்தைகளும் மற்றும் குழந்தைகளுக்கும் வெளிப்புற விளையாட்டினை கற்றுக்கொடுத்து வீடுகளுக்குள் முடங்கிவிடாத சூழ்நிலைை ஏற்படுத்த வேண்டும் என்றார் எஸ்பி. நிஷாபார்த்திபன்.

Updated On: 26 March 2022 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...