/* */

ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மானியம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்

HIGHLIGHTS

ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மானியம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் 1974ம் ஆண்டு ஆதிதிராவிடர்கள் குடியிருப்பதற்கான வீடுகளைக் கட்டுவதற்காக நிறுவன சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1980ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடாகளுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல், ஆதிதிரவிட மக்களின் தேவைக்கேற்ப பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்து தாட்கோ மானியம் மற்றும் வங்கி கடன் உதவியுடன் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாருர் மாவட்டத்தில் 2000 ஆண்டில் தாட்கோ நிறுவனம் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் 2022-23-ம் நிதி ஆண்டிற்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும். தொழில் செய்ய தாட்கோ மூலம் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஒருவருக்கு ரூ.3.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்தஃ குத்தகைஃவாடகைக் கட்டிடம் இருக்கலாம். அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வணிகத்தை தொடங்குவதற்கு முன், விண்ணப்பதாரர் (FSSAI) நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தைப் பெற வேண்டும். அடையாள பலகை (Sign Board), உட்புற வடிவமைப்பு (Interior) போன்றவற்றை விண்ணப்பதாரரே மேற்கொள்ள வேண்டும். குளிர்விப்பான் (Cooler) மற்றும் உறைவிப்பன் (Freezer) குறைந்தபட்ச கொள்ளளவு 200 லிட்டர் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தில் அவ்வப்போது செயல்படுத்தப்படும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், இது தொடர்பான விவரங்களை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ,காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை புதுக்கோட்டை என்ற முகவரியில் அல்லது 04322-221487 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்;டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Nov 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!