/* */

சம்பா சாகுபடிக்கு பின், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் ஏக்கருக்கு ரூ.400- மானியத்தில் வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

சம்பா சாகுபடிக்கு பின், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் ஏக்கருக்கு ரூ.400- மானியத்தில் வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 2 இலட்சத்து 15 ஆயிரத்து 831 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து பயிர் தனிபயிராகவும், மானாவாரி பயிராகவும், சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நெல் சாகுபடிக்கு பின்னர் தரிசில் உளுந்து சாகுபடியும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகளான, மாற்றுப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால் நீர் பயன்பாடு குறைகிறது. நீர்வளம் சேமிக்கப்படுகிறது. 60-75 நாட்களுக்குள் உளுந்து பயிர் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. உளுந்து போன்ற பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சில் தழைச்சத்து சேகரிக்கப்படுவதனாலும், அதன் தழைகளை வயலில் மடக்கி உழுவதினாலும் மண்வளம் மேம்படுகிறது. பயிர் சுழற்சியின் காரணமாக பூச்சிநோய் தாக்குதல் குறைகிறது. உளுந்து குறுகியகால பயிர் என்பதனால், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயலில் மீதமிருக்கும் உரச்சத்துக்களை பயன்படுத்திக்கொள்கிறது. இதனால் உரச்செலவு குறைகிறது. புரதச்சத்து மிக்க உணவின் தேவை அதிகமாக இருப்பதனால், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல சந்தை விலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

இத்தகைய பலன்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதனால் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நெல் நடவுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு உளுந்து விதைகள் ஒரு ஏக்கருக்கு ரூ.400ஃ- மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான தரமான சான்று பெற்று உளுந்து விதை இரகங்களான வம்பன் 8, வம்பன் 10 ஆகிய இரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கிட தயார் நிலையில் உள்ளது.

எனவே, விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி செய்து பயன் பெறலாம்.

Updated On: 10 Jan 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...