/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

துப்பாக்கிசுடும் பயிற்சி வரும் செப். 4 -ஆம் தேதி வரை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரியும் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் சட்டம் ஒழுங்கு போலீஸ் வரை என 1850 காவல்துறை அலுவலர்களுக்கு சாதாரண துப்பாக்கி முதல் ஏ.கே. 47 துப்பாக்கி சுடும் பயிற்சி பசுமலைபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு காவல் துறையில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை என அனைவருக்கும் பணிக்கு சேரும் போதே, பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அடங்கும். காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியை அவ்வப்போது வழங்கப்படுகிறது . இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் உட்பட சட்ட ஒழுங்கு போலீஸார், ஆயுதப்படை போலீசார், மாவட்டத்தில் பணியாற்றும் ஆயிரத்து 850 பேருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் , பசுமலைபட்டியில் உள்ள காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி இன்று தொடங்கியது..

மிகவும் பாதுகாப்பாக நடைபெறும் துப்பாக்கி சுடும் பயிற்சியில், அனைத்து காவல் துறையினரும் பங்கேற்று துப்பாக்கிகளை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு குறிபார்த்து சுடுவது என்பது குறித்து பயிற்சியை குழு குழுவாக எடுத்து வருகின்றனர். இந்த பயிற்சி வரும் 4-ஆம் தேதி வரை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Aug 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்