/* */

புதுக்கோட்டை: திருவப்பூரில் மேம்பாலம் அமைக்க கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை: திருவப்பூரில் மேம்பாலம் அமைக்க  கையெழுத்து இயக்கம்
X

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி புசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது/

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக முக்கிய போக்குவரத்து பிரச்சினையாக இருந்து வருவது திருவப்பூர் ரயில்வே கேட். இந்த கேட்டை உள்ள இடத்தில் மேம்பாலம் கட்டவேண்டுமட் என்பது கடந்த இருபத்தைந்து வருட கோரிக்கையாகும். மேம்பாலம் அமைக்கப்படாமல் உள்ளதால் அதிக அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக காலை, மாலை வேளைகளில் கேட் மூடப்படும்போது நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேம் பாலம் அமைப்பதற்கு கோரிக்கை வைத்தும் இதுவரையும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் திருவப்பூர் ரயில்வே கேட் முன்பு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் இப்ராகிம் பாபு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளும் விதத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.


Updated On: 20 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா