/* */

மணவிடுதி அரசு உயர் நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் உதயக்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மணவிடுதி அரசு உயர் நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X

புதுக்கோட்டையை அடுத்த மன விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் உதயக்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி அறிவுரையின்படியும் மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆலோசனையின்படியும் மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை பேரணியை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

சுமார் 60 மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் புத்தகம் , பேனா ஆகியவைகள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் வாகனங்களில் செல்பவர்கள் 100 ல் சென்றால் 108 ல் செல்வோம். சிக்னலை மதிப்போம் சிக்கலை தவிர்ப்போம் தலைக்கவசம் உயிர்க்கவசம்படியில் பயணம் நொடியில் மரணம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்திக் கொண்டு மணவிடுதி குடியிருப்புகளை சுற்றி பேரணி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 1 Dec 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...