/* */

புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வெற்றி பெற்றவர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஸ் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார் . தொடர்ந்து கஜாபுயல் வெள்ள பாதிப்பு என பல்வேறு நிலைகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சிறப்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றனர்.

அதேபோல் கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைப்பதற்கு ஏதுவாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே குரங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்காக தண்ணீர் தொட்டியை கட்டிக்கொடுத்து பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது நகராட்சி தேர்தல் வரவிருக்கும் நிலையில் புதுக்கோட்டை பழனியப்பா அருகே உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

Updated On: 14 Nov 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...