/* */

புதுகை நகராட்சியில் ரூ. 1.55 கோடியில் கழிப்பறைகள் மேம்பாட்டு பணிக்கு ஒப்புதல்

மொத்தம் 12 இடங்களில் ரூ. 57 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கவும் நகர்மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

HIGHLIGHTS

புதுகை நகராட்சியில் ரூ. 1.55 கோடியில் கழிப்பறைகள் மேம்பாட்டு பணிக்கு ஒப்புதல்
X

புதுக்கோட்டை நகராட்சியில் புதன்கிழமை   நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள்

புதுக்கோட்டை நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள பொதுக் கழிப்பறைகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளிலுள்ள கழிப்பறைகளை மேம்படுத்துவதற்காக 38 பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு குறைந்த மதிப்பீட்டைக் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். விரைவில் பணி தொடங்கவுள்ள இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1.55 கோடியாகும்.

பொதுக் கழிப்பறைகள்:நத்தம்பள்ளம், வண்டிப்பேட்டை, காமராஜபுரம் 10ஆம் வீதி, போஸ்நகர் 1ஆம் வீதி, அம்பாள்புரம், திருவப்பூர் மாரியம்மன் கோவில், ராஜகோபாலபுரம் வாரிப்பட்டி, நெல்லுமண்டித்தெரு, உசிலங்குளம், பேராங்குளம், திருவள்ளுவர் நகர், கூடல் நகர், மாலையீடு அம்பலக்காரத்தெரு, மாலையீடு ரவுண்டானா, வட்டாப்பட்டி, பூங்காநகர், மாப்பிள்ளையார்குளம், மேலராஜவீதி, சாந்தாரம்மன் கோவில், திருக்கட்டளை சாலை, காந்தி நகரில் 1, 5 மற்றும் 7ஆம் வீதிகளிலுள்ள பொதுக்கழிப்பறைகள் மேம்படுத்துதல் என மொத்தம் 23 பணிகள் ரூ. 91 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

நகராட்சிப் பள்ளிகள்: அடப்பன்வயல், காந்திநகர், உசிலங்குளம், திருவப்பூர், ராஜகோபாலபுரம், கோவில்பட்டி, திருக்கோகர்ணம், சந்தைப்பேட்டை, போஸ்நகர், மச்சுவாடி, பிள்ளைத்தண்ணீர்ப்பந்தல், மாலையீடு ஆகிய பகுதிகளிலுள்ள நகராட்சிப் பள்ளிகளில் கழிப்பறை மேம்படுத்துதல்.

இவற்றுடன் காந்திநகர் பள்ளிக் கழிப்பறையில் இருந்து புதை சாக்கடையுடன் இணைத்தல், ராஜகோபாலபுரம் பள்ளியில் கூரைதளம், சுவர் வெடிப்புகள், தண்ணீர் கசிவு சீரமைத்தல், தைலாநகர் பள்ளியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், அடப்பன்வயல் பள்ளியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் என மொத்தம் 15 பணிகள் ரூ. 64 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன.

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சீரமைப்பு: புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள காமராஜபுரம், அடப்பன்வயல், உசிலங்குளம், திருவப்பூர், தர்மராஜபிள்ளை பள்ளி, காந்திநகர், ராஜகோபாலபுரம், திருக்கோகர்ணம், அசோக்நகர் ஆகிய 9 நகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் பழுதுகளை நீக்கும் பணிக்கு ரூ. 3.39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் தற்போது முதல்வரின் காலை உணவுத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

12 உயர்மின் கோபுர விளக்குகள்: புதுக்கோட்டை நகராட்சியில் 2, 4, 5, 11, 15, 19, 24, 27, 28, 34, 36, 40 ஆகிய வார்டுகளில் மொத்தம் 12 இடங்களில் ரூ. 57 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கவும் நகர்மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நகரின் பல பகுதிகளில் நிலவும் இருளைப் போக்கவும், பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து இந்த மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் இவற்றுக்கான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு. லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பன்றி, நாய்களுக்கு கட்டுப்பாடு: புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பன்றிப் பண்ணைகள் அமைக்க ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் பல பகுதிகளிலும் சுற்றிவரும் பன்றிகளைக் கட்டுப்படுத்த, குடியிருப்புப் பகுதியில் பன்றிகளுக்கு முழுமையான தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சண்முகாநகர் பகுதியிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நாய்களுக்கான கருத்தடை மையம் ஒன்றை ரூ. 25 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 20 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு: புதுக்கோட்டை நகரில் பரவலாக 42 வார்டுகளிலும் தற்போது புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளும், குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால், சாலைகளை சீரமைத்திட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 19 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...