/* */

புரட்டாசி பிறப்பு எதிரொலி: களையிழந்த புதுக்கோட்டை ஆட்டுச்சந்தை

புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்படுகிறது.

HIGHLIGHTS

புரட்டாசி பிறப்பு எதிரொலி: களையிழந்த புதுக்கோட்டை ஆட்டுச்சந்தை
X

புதுக்கோட்டையில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் குறைந்த அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே வாரவாரம் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருந்தும், பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வரும். சென்ற மாதம் முழுவதும் முகூர்த்த காலம் என்பதால், தொடர்ந்து ஆடுகளின் விலை இரு மடங்கு அதிகரித்தும் விற்பனையும் அதிகரித்து வந்தது. இதனால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் இறைச்சிச்கடை வைத்திருப்பவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருண்டனர்.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் வழக்கம் போல் ஆட்டுச் சந்தை கூடியது. ஒவ்வொரு வாரமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வரும். இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், வாரச்சந்தையில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அது மட்டுமில்லாமல் ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஒரு சிலர் விற்பதற்காக கொண்டு வந்த ஆடுகளின் விலையும் இரு மடங்கு குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்டதால் விற்பனை செய்யாமல் ஆடுகளை மீண்டும் வீடுகளுக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், பலர் இறைச்சிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால், ஆடுகள், இறைச்சிகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 Sep 2021 2:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?