/* */

தடையை மீறி பேரணி நடத்திய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 1000 பேர் கைது

மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு அல்ல மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கமாக தமிழக அரசு இருக்க வேண்டும்

HIGHLIGHTS

தடையை மீறி பேரணி நடத்திய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 1000 பேர் கைது
X

புதுக்கோட்டையில் போலீசார் தடையை மீறி ஒற்றுமை பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்

புதுக்கோட்டையில் போலீசார் தடையை மீறி ஒற்றுமை பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தேசிய பிரசாரத்தை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் தென்காசி இராமநாதபுரம் சேலம் காஞ்சிபுரம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தேசி பிரசாரத்தை முன்வைத்து ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை நடத்த போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்டது.இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அணிவகுப்பு பேரணியானது பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தபோது போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைபடுத்து போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்று தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத் தலைவர் ஹாலித் முகம்மது செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சமூக நீதி காவலன் என்று கூறிவரும் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக மாநாடு நடத்தினாலும் வேறு எந்த கட்சிகள் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தினாலும் அணிவகுப்பை நடத்துகின்றனர். இதேபோல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்துகின்றது .அதற்கெல்லாம் அனுமதி வழங்கிய தமிழக அரசு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்படும் ஒற்றுமை அணிவகுப்புக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறது என்று புரியவில்லை.மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் அல்ல மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தான் அரசு. எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஒற்றுமை பேரணிக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Updated On: 10 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  2. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  3. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  4. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  5. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  6. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  7. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  8. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  9. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  10. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!