/* */

பி.எம்.கிசான் பயனாளிகள் அடுத்த தவணை தொகையினை பெற e-KYC எனும் ஆதார் எண் உறதி செய்யலாம்

விவசாயக்குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000- வீதம் ஆண்டுக்கு ரூ.6000- வீதம் 3 முறை வழங்கப்படும்

HIGHLIGHTS

பி.எம்.கிசான் பயனாளிகள் அடுத்த தவணை தொகையினை பெற e-KYC எனும் ஆதார் எண் உறதி செய்யலாம்
X

பி.எம்.கிசான் பயனாளிகள் அடுத்த தவணை தொகையினை பெற e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேளாண் அதிகாரி ஆலோசனை.

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000- வீதம் ஆண்டிற்கு ரூ.6000- மூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம் நடப்பாண்டில் அடுத்த தவணையாக அதாவது டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணைய தளத்தில தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதிசெய்து கொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைப்பேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் செய்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே பி.எம்.கிசான் தவணை பெறும் ந-முலுஊ செய்யாத விவசாயிகள், மேற்காணும் முறைகளில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி, e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்யும் பணியினை செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். புதுக்கோட்டை வட்டாரத்தை பொறுத்தவரை 2696 பி.எம்.கிசான் விவசாயிகள் e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்யும் பணியினை செய்து முடிக்காமல் உள்ளனர். மேலும் இதற்காக கூடுதல் விபரம் அளிக்க பி.எம்.கிசான் தகவல் மையம் ஒன்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வட்டார பி.எம்.கிசான் பயனாளிகள் இத்தகவல் மையத்தை அணுகி கூடுதல் விபரம் பெற்று பி.எம்.கிசான் e-KYCஎனும் ஆதார் எண் உறுதி செய்யும் பணியிணை உடனடியாக மேற்கொண்டு பயன்பெறுமாறு புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...