/* */

கவிநாடு கண்மாய் : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்களை அப்புறப்படுத்திய காவல்துறை

பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலையைத் தடுக்கும் வகையில் தற்போது போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கவிநாடு கண்மாய் : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்களை அப்புறப்படுத்திய காவல்துறை
X

கவிநாடு கம்மாய் ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்களை அங்கிருந்த அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை.

கவிநாடு கண்மாய் நிரம்பியதை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்களை அங்கிருந்த போலீஸார் அப்புறப்படுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பெரிய கண்மாயாக கவிநாடு கண்மாய் இருக்கிறது. ஏறத்தாழ சுற்று வட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகளுக்கு பாசன வசதியை இந்த கண்மாய் அளித்து வருகிறது. கடந்த பல வருடங்களாக வறட்சியின் காரணமாக கண்மாய் நிரம்பாமல் இருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து, சென்ற அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி செய்து கவி நாடு கன்ம்மாய்யை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். கடந்த ஆண்டில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கவிநாடு கண்ம்மாயில் நீர் நிரம்பியதால் விவசாயத்திற்கு பயன்பட்டது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் கவிநாடு கண்மாய் தற்போது முழு கொள்ளளவை எட்டு-ம் நிலை ஏற்பட்டுள்ளது.



கண்மாயில் தண்ணீர் நிரம்பி வருவதால் இதிலுள்ள மதகுகளின் ஷட்டரை திறப்பதற்கு கவிநாடு கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் தற்போது தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிக அளவில் கண்மாயில் மழைநீர் நிரம்பியுள்ளதைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கம்பியின் மேல் உள்ள பாலத்தின் மேல் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

ஒரு சிலர் கண்மாயில் உள்ளே இறங்கி ஷட்டரின் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரில் குளித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் ஏதேனும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும் என்பதால், தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்மாயில் நீர் நிரம்பி உள்ளது பார்ப்பதற்கு வரும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், கவிநாடு கண்மாயில் நீர் நிரம்பி வரும் சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது. இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை நீரை பயன்படுத்தி, விவசாயிகள் தற்போது விவசாயப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Updated On: 8 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  5. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  8. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?