/* */

குடிசைமாற்று வீடு திட்டத்திற்கு போலியானபயனாளிகள்:அமைச்சர் தகவல்

குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு போலியான பயனாளிகள் சேர்க்கப்பட்டு இரண்டாயிரம் கோடிக்கு மேல் வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பரசன் பேட்டி

HIGHLIGHTS

குடிசைமாற்று வீடு திட்டத்திற்கு  போலியானபயனாளிகள்:அமைச்சர் தகவல்
X

மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில் தொடங்குவதற்கு கடன் நிதி உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

புதுக்கோட்டை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தை நிதி உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் சிறு தொழில்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து தமிழக ஊரக தொழில் மற்றும் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சட்ட அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில் தொடங்குவதற்கு கடன் நிதி உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக பல்வேறு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் பல பகுதிகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

மீதமுள்ள பணிகள் முடிவடைந்தவுடன் படிப்படியாக பயனாளிகளுக்கு வீடுகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு போலியான பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆய்வு நடத்தி முறையான பட்டியல் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சிலர் ஆதாயம் தேடுவதற்காக பயனாளிகள் தேர்வு இல்லாமலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள பயனாளிகள் தங்களின் பயனாளி தொகை கட்டுவதற்கு சிரமப்பட்டால் அவர்களுக்கு அரசு நிதி உதவி வங்கிகளில் பெற்றுத்தரும். அதன்பிறகு பயனாளிகள் வங்கி கடனை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள அனைத்து பயனாளிகளின் வீடுகளுக்கு பட்டா உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இனிவரும் காலங்களில் மாற்று வாரியத்தால் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு முறையாக அவர்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு வீடுகளை தேர்வு செய்து வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.

Updated On: 23 July 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!