/* */

தேர்தல் நேரத்தில் கூறிய எதையும் திமுக நிறைவேற்றவில்லை: சி.விஜயபாஸ்கர்

கஜா புயல், கொரோனா பேரிடர்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த கட்சி அதிமுக

HIGHLIGHTS

தேர்தல் நேரத்தில் கூறிய எதையும்  திமுக நிறைவேற்றவில்லை:  சி.விஜயபாஸ்கர்
X

18வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாரதியை ஆதரித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 

திமுக தேர்தல் நேரத்தில் கூறிய எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் மூன்றாவது நாளாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.18வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாரதியை ஆதரித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,

கஜா புயலாக இருந்தாலும் சரி கொரோனா காலகட்டமாக இருந்தாலும் சரி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த கட்சி இரட்டை இலை கட்சி.மேலும் திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. பொங்கலுக்கு பரிசுத்தொகையை திமுக அரசு வழங்கவில்லை. இதேபோன்று மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள். அதுவும் இதுவரை வழங்கவில்லை.திமுக கூறிய எதையும் இதுவரை அவர்கள் நிறைவேற்றவில்லை மக்களுக்கு கொடுக்கும் கட்சி அதிமுக. எனவே பொது மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்றார் விஜயபாஸ்கர்.

Updated On: 16 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்