/* */

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

75 வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
X
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. சுதந்திரதின விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுதந்திர தினவிழாவின் போது துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன்படி காவல்துறையினர் சுதந்திரதின விழா நடைபெறவுள்ள ஆயுதப்படை மைதானத்தில் அணி வகுப்பு நடத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறையினர் மேடை அலங்காரப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

காவல் கண்காணிப்பாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள்அமர்வதற்கு சமூக இடைவெளியுடன் கூடிய தனி இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பிற பணிகளை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனத்தை நிறுத்தவும், மேடை அலங்காரம், வர்ணம் பூசுதல், பந்தல் அமைத்தல், ஒலி, ஒளி பெருக்கி சாதனங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணித்து மேற்கொள்ளவும் புதுக்கோட்டை வட்டாட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விழா நடைபெறும் இடத்தினை சுத்தம் செய்தல், குடிநீர் வசதி, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டாரபோக்குவரத்து அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உணவு பாதுகாப்புத்துறை, இலுப்பூர், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கலால், நெடுஞ்சாலைத்துறை, ஆவின்,செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), அலுவலக மேலாளர் (நீதியியல்) மற்றும் (பொது) உள்ளிட்ட துறை அலுவலர்கள் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்விழாவில் கோவிட் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 2 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...