/* */

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு போராட்டம்

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு போராட்டம்
X

புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   சார்பில்  மனு கொடுத்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இடிப்பதை நிறுத்து பட்டாவை வழங்கு என தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை ஒன்றியம் மற்றும் நகர குழு சார்பில் அரசுக்கு பயன்பாடற்ற பல்வேறு வகை புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி அப்புறப்படுத்துவது கைவிடு, வீடுகளை இடிப்பதை கைவிடு வாழ்க்கையை நடத்திட வசதியற்ற ஏழை குடும்பங்கள் வாடகை வீட்டில் வசிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டு மனையில் வீடு வழங்க கோரிக்கை வைத்தும்,

நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்களில் ஏழை மக்களுக்கு முன்னுரிமையும் கிராமத்திற்கு விரிவு விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வைத்து புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக வந்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு கொடுக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு