/* */

பாலியல் வன்கொடுமையை தட்டிக் கேட்ட தலித் பெண் மீது தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

Attack on Dalit woman who tapped into sexual harassment: CPM condemnation

HIGHLIGHTS

பாலியல் வன்கொடுமையை தட்டிக் கேட்ட தலித் பெண் மீது தாக்குதல்: சிபிஎம்  கண்டனம்
X

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சியைத் தட்டிக் கேட்ட தலித் பெண்ணின் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்.

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த தலித்; பெண்ணின் வீடு புகுந்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கருக்காக்குறிச்சி ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ஆத்மநாதன் மகள் காளீஸ்வரி. தலித் வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரி கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த வீரப்பன் மகன் தர்மராஜ்(28) காளீஸ்வரியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதிலிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து நடத்த சம்பவத்தை தாயாரிடம் விளக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காளீஸ்வரியின் மாமன் மகன் கிருஷ்ணமூர்த்தி மேற்படி தர்மராஜிடம் "ஏன் இப்படி நடந்து கொண்டாய்" எனக் கேட்ட போது கிருஷ்ணமூர்த்தியையும் தாக்குகிறார் தங்கராஜ். இதனைத் தொடர்ந்து நடந்துள்ள சம்பவத்தை விளக்கி கிருஷ்ணமூர்த்தி, காளீஸ்வரி மற்றும் அவரது தயார் கவிதா ஆகியோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புதன்கிழமையனறு புகார் அளிக்கின்றனர்.

இதனால், மேலும் ஆத்திரமடைந்த தர்மராஜ் மற்றும் அவரைச் சேர்ந்த சுப்பிரமணியன், சுரேஷ், சரவணன், பாலு உள்ளிட்ட 12 பேர் கும்பல் அன்று மாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தும், தடுக்க வந்த அண்டை வீட்டாரையும் கொலைவெறியுடன் தாக்குல் தொடுத்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த தங்கையா, கிருஷ்ணமூர்த்தி, கவிதா, அமுதா, கலைச்செல்வன், அஜித்குமார் ஆகியோர் தற்பொழுது புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடந்துள்ள சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வடிவேல் விசாரணை நடத்தியுள்ளார். மருத்துவமனைக்கு வந்து கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் விசாரணை நடத்தியுள்ளார். ஆனாலும், தாக்குதல் தொடுத்தவர்கள் மீது காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.காமராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், மிடறு முருகதாஸ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தெரிவித்துள்ளது: பொதுவாக மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் வெளியில் தெரிவதில்லை. இதனால், பல குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் மட்டுமே காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், மாவட்ட காவல்துறையோ, முறையான வழக்குப்பதிவு செய்வதில்லை. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு மறைமுகமாக காவல்துறையினரே உடந்தையாக இருக்கின்றனரோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

எனவே, மேற்படி குற்றவாளிகள் மீது உடனடியாக தீண்டாமை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தோடு இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.


Updated On: 16 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...