/* */

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி பரிசு

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாதவாறு பதக்கங்கள் பெரும் தமிழக வீரர்களுக்கு முன்கூட்டியே தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி பரிசு
X

பத்திரிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. தடுப்பூசி போடும் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. தமிழக வீரர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வீரர்கள் 12 பேரும் டோக்கியோவில் பாதுகாப்பாக நலமாக உள்ளனர். தமிழக வீரர்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து சென்ற உள்ள அனைத்து வீரர்களும் பதக்கங்களுடன் திரும்பி வருவார்கள்.

இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் செய்யாதவாறு முன்கூட்டியே, தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் என்றால் மூன்று கோடி ரூபாய், வெள்ளிப் பதக்கம் என்றால் இரண்டு கோடி ரூபாய், வெண்கல பதக்கம் என்றால் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகைகள் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Updated On: 23 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...