/* */

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய 2ம் வகுப்பு மாணவி

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, தனது உண்டியல் சேமிப்புத் தொகையை வழங்கிய 2ம் வகுப்பு மாணவியை பலரும் பாராட்டினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓவியா; இவரது மகள் சீர்த்தி கண்ணம்மா. 6 வயதுடைய இவர் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கொரோனா தொற்றால் மோசமான சூழ்நிலையை பலரும் கடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது.

அவ்வகையில், இரண்டாம் வகுப்பு மாணவி சீர்த்தி, தனது உண்டியல் சேமிப்பு பணத்தை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம், நேரடியாக வந்து நிவாரண நிதியாக வழங்கினார். அதில் 1280 ரூபாய் இருந்தது. சிறுமியின் இச்செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆட்சியர் உள்பட அனைவரும், சிறுமியை பாராட்டினர்.

இதுகுறித்து, சிறுமி சீர்த்தி கூறுகையில், அம்மா 3 வயதில் எனக்கு உண்டியல் தந்தார்கள். அவர் தரும் சிறு தொகையை இதில் சேமித்து வந்தேன். பலருக்கும் உதவட்டுமே என்று, இந்த தொகையை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினேன் என்றார்.

Updated On: 24 Jun 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!