/* */

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி

மல்லர் கம்பம், ரோல்பால், கராத்தே, கிக் பாக்சிங், வில்வித்தை ஆகிய புதிய விளையாட்டுகளில் புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி
X

பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு  நடைபெற்ற புத்தாக்க பயிற்சி.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 விளையாட்டு போட்டிகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மல்லர் கம்பம், ரோல்பால், கராத்தே, கிக் பாக்சிங், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் அக். 30-ஆம் தேதி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா எம் ஜி ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சி முகாமினை முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 75 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மல்லர் கம்பம், ரோல்பால், கராத்தே, கிக் பாக்சிங், வில்வித்தை ஆகிய புதிய விளையாட்டுகளுக்கான புத்தாக்க பயிற்சியினை பயிற்சியாளர்கள் அளித்தனர்.

இதில், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாபு, முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சிதம்பரம் மற்றும் ராஜேந்திரன், தடகள பயிற்சியாளர் கோகிலா உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், தடகள பயிற்சியாளர் கோகிலா ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 30 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...