/* */

அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நபருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்

அரசு தலைமை மருத்துவமனையில் வெகு நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் நபருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும்  நபருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்
X

ஆதரவற்ற நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் நபர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு உடலில் அடிபட்ட நிலையில் ஒருவரை அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத சிலர் அனுமதித்து விட்டு சென்று விட்டதாக தெரிய வருகிறது,

இதனை தொடர்ந்து அந்த நபருக்கு சிகிச்சை அளித்தும் பேச முடியாத நிலையிலிருந்த அவருக்கு இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்த பின்பு விசாரித்த பொழுது அவர் திருச்சியை சேர்ந்த தங்கராசு என்பதுமட்டும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரால் எழுந்து நடக்க முடியாமல் படுத்த இடத்திலேயே கிடப்பதும் அவருக்கு உதவிக்கு ஆள் இல்லாமல் விலாசம் தெரியாமல் இருந்ததால், வெகுநாட்கள் படுக்கையில் இருந்த அவரை, மருத்துவமனை வளாகத்தில் தனியாக வெளியே படுக்க வைத்துள்ளனர்.

மேலும் அவருக்கு எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை என தெரியவருகிறது, பல பேர் சென்று வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அந்த நபர் தனியாக கிடப்பதும், கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அங்கேயே படுத்துக் கிடப்பதால் பார்ப்பவர்களில் முகத்தை சுளிக்கும் வண்ணம் உள்ளது.

மேலும் அவர் அருகில் கிடக்கும் தட்டில் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவு ஒரு சிலர் அதில் வைக்கின்றனர். நினைவு இருக்கும் பொழுது அதை எடுத்து சாப்பிட்டு விட்டு திரும்பவும் அதே இடத்தில் படுத்துக் கிடப்பது சில நாட்களாகவே வழக்கமாக இருந்து வருகிறது,

மேலும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் இவருக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் மூலமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு போதிய சிகிச்சை கொடுத்து, போலீசார் மூலம் அவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க என அங்கு வரும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Updated On: 9 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்