/* */

பெரம்பலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ.நிவாரண உதவி

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. பிரபாகரன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ.நிவாரண உதவி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபாகரன் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக பச்சைமலை கிராமத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் மேலப்புலியூர் மலை அடிவாரத்தில் இருந்து வெள்ளமாக பெருக்கெடுத்து மேலப்புலியூர் ஏரி ஒரே இரவில் நிரம்பி வழிய தொடங்கியது.

இந்த வெள்ள நீர் ஓடையில் இருந்து அடைப்புகள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவே கிராமத்திற்கு தெருக்கள் முழுவதும் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த கிராமமக்கள் சிக்கி முக்கி தள்ளாடினர். மழை வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டது . தகவலறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து முதல் கட்டமாக பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார்.

பச்சை மலையில் இருந்து வெள்ளை நீர் பெருக்கெடுத்து செல்லும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஓடைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ,அதேபோல் மழைநீரால் பாதிக்கப்பட்ட 63 வீடுகள், நூலகம் மற்றும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கவும், முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனைகளை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அறிவுறுத்தினார்.

Updated On: 7 Nov 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...