/* */

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டம்

நரிக்குறவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி வேண்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூ பெரம்பலூர் மாவட்டம் 36. எறையூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு கடந்த 1977 ம் ஆண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக 150 குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் 300 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 1984 முதல் நிலங்களுக்கு பயனாளிகளான இவர்கள் வரி செலுத்தி வந்தனர்.

இதனிடைய 45 ஆண்டுகளாக இவர்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட வில்லை மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக கூறி விளை நிலங்களை விட்டு காலி செய்யும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி நரிக்குறவ இன மக்கள் உழவு பணிகள் மேற்கொண்ட போது வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நரிக்குறவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், தரையில் படுத்து புரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலை பிடித்து தீக்குளிக்க முயன்றனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வருகை தந்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்jதால் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 13 Sep 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்