/* */

பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெரம்பலூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில்  வளர்ச்சிப் பணிகள் குறித்த  ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சி திட்ட பணிகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ள வேளாண் கருவிகள் குறித்தும், கூட்டுறவு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்த விவரங்களையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, தாட்கோ, பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்தி வருகிறார்கள், அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் மற்றும் உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானியங்களை விவசாயிகள் உடனடியாக பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும் அனைத்து துறை அலுவலர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து செயலாற்றுவதை போல தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, திட்ட இயக்குநர்(ஊரக வளர்ச்சி முகமை) அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சி.ராஜேந்திரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.பிரபாசெல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் டாக்டர்.கருணாநிதி, மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்