/* */

பிரதமரை பற்றி அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாரத பிரதமரை பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பெரம்பலூர் அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பிரதமரை பற்றி அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து  ஆர்ப்பாட்டம்
X

பாரத பிரதமரை பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பெரம்பலூர் அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், பாஜக கட்சி குறித்தும் பொது இடத்தில் அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவை பார்த்து பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சியினர் பங்கேற்று கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Updated On: 24 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...