/* */

நாமக்கல்லில் உரிய ஆவணமின்றி இயக்கிய 56 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து துறையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் உரிய ஆவணமின்றி இயக்கிய 56 வாகனங்கள் பறிமுதல்
X

பைல் படம்.

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படியும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல் பேரிலும், மாவட்டம் முழுவதும், கடந்த மாதம் திடீர் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்டிஓ.,க்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி மற்றும் ராசிபுரம், ப.வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் வாகன சோதனை நடத்தப்பட்டது.

ஆய்வில், 4,323 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் 842 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாமல் ஓட்டிய, வாகனங்களுக்கு ரூ. 17,68,597 ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது.

அதேபோல் 489 வாகனங்களுக்கு ரூ. 20,61, 250 அபராதம் விதிக்கப்பட்டது. இச்சோதனையின் போது வாகனத்தின் எப்.சி சான்று இல்லாதது, பர்மிட் இல்லாதுது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது உள்ளிட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 7 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு