/* */

மோகனூர் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்

மோகனூர் பேரூராட்சியில் ரூ. 35.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மோகனூர் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்
X

மோகனூர் பேரூராட்சியில் ரூ. 35.70 லட்சம் மதிப்பீட்டில், சாலை அமைப்பு பணிகளை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல், மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு மற்றும் 6வது வார்டு பகுதிகளில், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.70 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணிகள் துவக்க விழாவிற்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் வனிதா, அட்மா கமிட்டி தலைவர் நவலடி, மோகனூர் நகர திமுக செயலாளர் செல்லப்பன், மோகனூர் பேரூராட்சி துணைத்தலைவர் சரவணகுமார், முன்னாள் மாவட்ட திமுக அவைத் தலைவர் உடையவர், மோகனூர் இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாலை அமைப்பு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் சுகுமார், வரதராஜன், குமரவேல், உதயபானு, கோவிந்தன், பாப்பாத்தி, ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jun 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!