/* */

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் பெற வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்:  18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு பெற வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு https://www.tn.gov.in/ என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 476 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், விதிமுறைப்படி இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்கள், இது குறித்து டிஆர்ஓவிடம் கோரிக்கை மனு அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் மனுவை தகுதியின் அடிப்படையில், டிஆர்ஓ தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வுகாணும். கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயன் அடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.



Updated On: 5 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!