/* */

தேசிய ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி: லெக்டர் துவக்கி வைப்பு

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தேசிய ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி: லெக்டர் துவக்கி வைப்பு
X

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற பேரணி மீண்டும் ஆஸ்பத்திரியில் முடிவடைந்தது. பின்னர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி மற்றும் டாக்டர்கள், நர்சுகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Oct 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு