/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் திறப்பு

Today Temple News in Tamil - நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் திறப்பு
X

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

Today Temple News in Tamil -நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை, பக்தர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். நேற்று அறநிலையத்துறை துணை கமிஷனர் (நகை சரிபார்ப்பு) ரமேஷ், கோயில் உதவி கமிஷனர் இளையராஜா, ஆய்வாளர் சுந்தர், கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கைகள் பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன. உண்டியல்களில் மொத்தம் ரூ.49,21,265 ரொக்கம், 33 கிராம் தங்கம், 1,098 கிராம் வெள்ளி பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டபோது, உண்டியலில் ரூ.48,40,249 ரொக்கம், 49.5 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது கணக்கிடப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:18 AM GMT

Related News