/* */

கொரோனா 3ம் அலை: நாமக்கல்லில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம்

கெரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது தொடர்பாக, நாமக்கல் நகராட்சி சார்பில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா 3ம் அலை: நாமக்கல்லில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம்
X

கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது குறித்து நடைபெற்ற வணிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் பேசினார். அருகில் வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயகுமார், நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் ஆகியோர்.

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்தும், திடக்கழிவு மேலாண்மையை திறம்பட கையாள்வது குறித்தும் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். அப்போது கடைகளில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சேரும் குப்பைகளை எவ்வாறு சுகாதாரமான முறையில் கையாள வேண்டும் என்றும் விளக்கிகூறினார்.

இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயக்குமார், ஹோட்டல் வியாபாரிகள் சங்க தலைவர் குழந்தான், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பத்ரிநாராயணன், பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் வேலுசாமி, நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2021 12:15 PM GMT

Related News