/* */

நாமக்கல் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்: 23ம் தேதி வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள்  தேர்தல்: 23ம் தேதி வாக்குப்பதிவு
X

மாவட்ட ஆட்சியர் உமா.


நாமக்கல், ஜூன் 20-

நாமக்கல் மாவட்டத்தில் 8 திட்டக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது.

மாநில தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட திட்டக்குழுவிற்கு, மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட ஊரக பகுதியிலிருந்து 8 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை உள்ளடக்கிய நகர்ப்புற பகுதியிலிருந்து 4 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனுக்கள், கடந்த 7.6.2023 முதல் 10.6.2023 முடிய பெறப்பட்டன. இதில், நகர்ப்புற பகுதிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய 4 உறுப்பினர்களுக்காக 5 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 1 வேட்பு மனு திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், இதர 4 வேட்பாளர்களான சீராப்பள்ளி பேரூராட்சி வார்டு உறுப்பினர் செல்வராஜீ, வேலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராமசாமி, நாமக்கல் நகராட்சி வார்டு உறுப்பினர் பூபதி மற்றும் திருச்செங்கோடு நகராட்சி வார்டு உறுப்பினர் மனோன்மணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

ஊரக பகுதிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய 8 உறுப்பினர்களுக்காக 16 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊரக பகுதிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடிவுற்றதும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

திட்டக்குழு தேர்தலை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தங்கவேலு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Jun 2023 3:45 AM GMT

Related News