/* */

நாமக்கல்லில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம்

நாமக்கல்லில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம்
X

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழா கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசும்போது 75வயது சுதந்திர தினஅமுதப் பெருவிழா வருகிற ஆக.15ம் தேதி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் போட்டோக்களை காட்சிப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் தொடர்புடைய துறைகள் கண்காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி வளர்ச்சி முக்கியமாகும். கல்வி வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். புத்தகங்கள்தான் சாதாரண குடிசை வீட்டில் பிறந்தவர்களைக் கூட உலகறிந்த அறிஞர்களாகவும், தலைவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், உயர் அதிகாரிகளாவும் உருவாக்கி உள்ளன. தினந்தோறும் புத்தகங்களை வாசிப்பது வாழ்வின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. புத்தக வாசிப்பை மக்களிடையே கொண்டு செல்ல தமிழக முதல்வர் மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவுடன் சேர்ந்து புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது. இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன.

விழாவை சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், டி.ஆர்.ஓ. கதிரேசன், ஆர்.டி.ஓ.க்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, பி.ஆர்.ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 15 July 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு