/* */

நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் டாப் ஷீட் தைக்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் டாப் ஷீட் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்  டாப் ஷீட் தைக்கும் பணி துவக்கம்
X

பைல் படம்.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு நடக்கவில்லை. இந்த ஆண்டு, வரும் மே 5ல் பிளஸ் 2க்கும், 6ல் 10ம் வகுப்புக்கும், 10ல் பிளஸ் 1 க்கும் பொதுத்தேர்வு துவங்குகிறது. இதையொட்டி, முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தும் விடைத்தாள்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 255 மையங்களில், பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,662 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை 19,842 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை, 19,866 பேர் எழுதுகின்றனர். பொத்துதேர்வுகளுக்கான விடைத்தாள்கள், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக கிடங்கில் இருந்தும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கிடங்கில் இருந்தும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, வகுப்பு வாரியாக பிரித்து அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்வு நேரத்தில், குளறுபடிகளை தவிர்க்க, பல்வேறு மாற்றங்களை அரசு தேர்வுத்துறை கொண்டு வந்துள்ளது. அதன்படி, விடைத்தாளில் மாணவர் புகைப்படம், பார்கோடு, சீரியல் எண், ரகசிய குறியீடு, தேதி, பாடம், மதிப்பெண் பட்டியல் அடங்கிய, அச்சிடப்பட்ட டாப் ஷீட் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை, விடைத்தாளுடன் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடைத்தாள்களுடன், டாப் ஷீட் இணைத்து தைக்கும் பணி, அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் கல்வி மாவட்டத்தில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் டாப் ஷீட் தைக்கும் பணியில் திரளான அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 9 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...