/* */

நீட் தேர்வைக் கண்டு மாணவ மாணவிகள் பயப்படத் தேவையில்லை: அண்ணாமலை அட்வைஸ்

நீட் தேர்வைக் கண்டு மாணவ மாணவிகள் பயப்படத் தேவையில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்

HIGHLIGHTS

நீட் தேர்வைக் கண்டு மாணவ மாணவிகள் பயப்படத் தேவையில்லை: அண்ணாமலை அட்வைஸ்
X

நாமக்கல்லில் நடைபெற்ற, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

நாமக்கல்லில், பாஜக சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசுகையில்,

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 18 லட்சம் பேர் மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு 1.42 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், தமிழகத்தில், 30 ஆயிரம் பேர் கூடுதலாக நீட் தேர்வு எழுதுகின்றனர். மத்திய அரசு, நீட் தேர்வை எழுத அனுமதித்ததை அடுத்து, இந்த ஆண்டு 34,300 பேர் தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

மத்திய அரசு நீட் தேர்வை வெளிப்படையாக, நேர்மையாக நடத்துகிறது. நீட் தேர்வு வந்த பின்பு, நாடு முழுவதும், பின்தங்கிய மாணவ, மாணவியர் தேர்வில் தேர்ச்சி அடைந்து, மருத்துவ கல்வி பெற்று வருகின்றனர். அனைவருக்குமான சம வாய்ப்பை, மத்திய அரசு நீட் தேர்வு மூலம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 58 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வரலாறு படைத்துள்ளனர்.

இந்திய அளவில் தமிழகம் தான் நீட் தேர்வில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு முதல், பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு, நீட் தேர்வை எளிமையாக எதிர் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தமிழகத்தில் 70 சதவீதத்தை தாண்டி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள்.

மாணவர்கள் நீட் தேர்வை கண்டு பயப்பட வேண்டாம். வாழ்க்கை என்பதே பரீட்சை தான். எனவே, பல்வேறு தடைகளை தாண்டி வந்த நீங்கள், நீட் தேர்வை எளிதில் அணுகி வெற்றி பெறவேண்டும். ஏழை எளிய மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனவே அனைவரும் விடாமுயற்சியோடு படித்து வெற்றி பெற வேண்டும் என அவர் அவர் பேசினார்.

தொடர்ந்து, நீட் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தேர்வுக்கான புத்தகங்களை வழங்கப்பட்டது. பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 29 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு