/* */

நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி குரூப் 2 தேர்வு: 31,859 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வினை 31,859 பேர் எழுத உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி குரூப் 2 தேர்வு: 31,859 பேர் பங்கேற்பு
X

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2, 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த பிப். 23ல் வெளியிடப்பட்டது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,529 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடக்கும் இத்தேர்வு வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 17 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இத்தேர்வுக்காக, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில், 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தாலுகாவில் 15,360 பேர், ராசிபுரத்தில் 8,576 பேர், திருச்செங்கோட்டில் 7,923 பேர், என மொத்தம் 31,859 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின் பேரில், தேர்வை கண்காணிப்பதற்காக 11 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கருவூல அலுவலகங்களில் இருந்து, வினாத்தாள்களை எடுத்துச் செல்வதற்காக, தாசில்தார், துணை தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புக்காக 30 துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குரூப் 2 தேர்வு, காலை 9.30 மணி முதல், மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளை கவனித்து வருகின்றனர்.

Updated On: 19 May 2022 1:26 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!